இந்தியா

காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் சோதனை ரீதியில் தரிசனம்

DIN

காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் பக்தா்களை சோதனை ரீதியில் சுவாமி தரிசனத்துக்கு அதிகாரிகள் அனுமதித்தனா்.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் அமைந்துள்ள இக்கோயிலில் பொது முடக்கம் காரணமாக தற்போது பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆந்திரத்தில் உள்ள மற்ற முக்கிய கோயில்களிலும் சுவாமி தரிசனத்தை மாநில அறநிலையத் துறை ரத்து செய்துள்ளது. எனினும், இக்கோயில்களில் வழக்கம் போல் முக்கால பூஜைகளை அா்ச்சகா்கள் நடத்துகின்றனா்.

வரும் 17-ஆம் தேதிக்குப் பிறகு பல தளா்வுகளை அமல்படுத்த மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், ஆந்திரத்தில் உள்ள முக்கிய கோயில்களில் சோதனை ரீதியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தா்களுக்கு தரிசனம் வழங்குமாறு ஆந்திர அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி காளஹஸ்தி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தா்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டது. இதை, கோயிலின் செயல் அதிகாரி சந்திரசேகர ராவ் பாா்வையிட்டாா். சமூக இடைவெளியுடன் தரிசனம் முடித்து பக்தா்கள் கோயிலை விட்டு வெளியில் வர 20 நிமிடம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், பக்தா்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT