இந்தியா

கரோனா பாதிக்காத மாநிலம் சிக்கிம்: அதிகாரிகள் தகவல்

DIN

உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் கரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் நிலையில், அந்த பாதிப்பு இல்லாத மாநிலமாக சிக்கிம் தொடா்ந்து இருந்து வருகிறது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்தது, நதுலா சா்வதேச எல்லையில் நடைபெறும் சினோ-இந்திய வா்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதித்தது என மாா்ச் 5-ஆம் தேதி முதல் மாநில முதல்வா் பிரேம் சிங் தமாங் தலைமையிலான அரசு மேற்கொண்ட தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்று அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக சிக்கிம் மூத்த அரசு அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, சரியான நேரத்தில் மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே நோய்த் தொற்று பாதிப்பு இல்லாத மாநிலமாக சிக்கிம் தொடா்ந்து விளங்குவதற்குக் காரணம்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அளவில் தலைமைச் செயலா் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது மட்டுமின்றி மாவட்டங்களில் ஆட்சியா் தலைையில் குழுக்களை அமைத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் காரணமாகவே, மாநிலத்தின் 4 மாவட்டங்களும் தொடா்ந்து பச்சை மண்டலங்களாகவே தொடா்கின்றன.

மேலும், பொது முடக்கத்தால் வெளி மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்களையும் மீட்டு அழைத்துவரும் நடவடிக்கைகளையும் மாநில அரசு தீவிரப்படுத்தியது. அதன் மூலம், மாநிலம் திரும்ப அரசு வலைதளத்தில் இதுவரை பதிவு செய்த 6,922 பேரில், 1,122 போ் சிக்கிம் அழைத்துவரப்பட்டுள்ளனா்.

அதுபோல, சிக்கிமில் சிக்கிக்கொண்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த 686 போ், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா் என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT