இந்தியா

மகாராஷ்டிரத்தில் 1,061 காவலர்களுக்கு கரோனா தொற்று; இதுவரை 9 பேர் பலி

DIN

மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. குறிப்பாக மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களும் கரோனா பாதிப்பு ஆளாகி வருகின்றனர். மகாராஷ்டிரத்தில் இதுவரை கரோனா பாதிப்புக்குள்ளான காவலர்களின் எண்ணிக்கை 1,061 ஆக அதிகரித்துள்ளது. இதில், 112 காவல்துறை அதிகாரிகளும்அடங்குவர். 

மேலும், இதுவரை 9 காவலர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். 174 பேர் குணமடைந்துள்ளனர். 

மகாராஷ்டிரத்தில் இதுவரை 27,524 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,019 பேர் பலியாகியுளளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT