முகப்பு
இந்தியா

பத்ரிநாத் கோயில் நடை இன்று மீண்டும் திறப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று காலை திறக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி சார்பில் முதல் பூஜை செய்யப்பட்டது. 

Updated On : 15 மே, 2020 at 1:34 PM
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று காலை திறக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி சார்பில் முதல் பூஜை செய்யப்பட்டது. 

ஆறு மாதத்திற்குப் பின்பு கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால், கரோனா காரணமாக சுவாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோயிலான பத்ரிநாத் இன்று அதிகாலை 4.30 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. 

Advertisement

ஏப்ரல் மாதம் திறக்கப்படவேண்டிய இந்த திருக்கோயில், கரோனா தொற்று பரவல் காரணமாக, இன்று திறக்கப்பட்டுள்ளது. தலைமை அர்ச்சகர் உள்பட 28 பேர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 

வரலாற்றில் முதன்முறையாகப் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.