இந்தியா

கரோனா: மகாராஷ்டிரம், மும்பை, தாராவி நிலவரம்

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,606 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 67 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 30,706 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22,479 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 1,135 பேர் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 7,088 பேர் குணமடைந்துள்ளனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 884 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 18,396 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 238 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,806 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 696 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவி:

தாராவியில் இன்று புதிதாக 53 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT