இந்தியா

கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்

DIN


பிற மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர் மற்றும் மொத்தம் பாதித்தோரின் சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 213 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,960 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,890 பேர் சிகிச்சையில் உள்ளனர், 126 பேர் பலியாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேசம்:

மத்தியப் பிரதேசத்தில் இன்று புதிதாக 195 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,790 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 243 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத்:

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 348 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 10,989 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4,308 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 625 பேர் பலியாகியுள்ளனர்.

ஹரியாணா:

ஹரியாணாவில் இதுவரை மொத்தம் 887 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 514 பேர் குணமடைந்துள்ளனர், 13 பேர் பலியாகியுள்ளனர்.

பஞ்சாப்:

பஞ்சாபில் இதுவரை மொத்தம் 1,946 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,257 பேர் குணமடைந்துள்ளனர், 32 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தரகண்ட்:

உத்தரகண்டில் கரோனா தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

ஒடிசா:

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 65 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 737 ஆக உயர்ந்துள்ளது. இதில் 538 பேர் சிகிச்சையில் உள்ளனர். 196 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 3 பேர் பலியாகியுள்ளனர்.

ஜார்கண்ட்:

ஜார்கண்டில் புதிதாக இருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. 

ஹிமாச்சலப் பிரதேசம்:

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 77 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 பேர் சிகிச்சையில் உள்ளனர். 35 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT