முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் டிரக் கவிழ்ந்து 5 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி

மகாராஷ்டிரத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிரக் ஒன்று, மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகினர். 19 பேர் காயமடைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:


சாகர்: மகாராஷ்டிரத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிரக் ஒன்று, மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகினர். 19 பேர் காயமடைந்தனர்.

புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த டிரக், சாகர் - கான்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் மரணம் அடைந்தனர். காயமடைந்த 19 பேரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பலியான தொழிலாளர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். டிரக்கில் ஏராளமான துணி பண்டல்கள் இருந்துள்ளன. அவற்றின் மீது அமர்ந்தபடி புலம்பெயர் தொழிலாளர்கள் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.