60 நாளில் 1,135 ஆக உயர்ந்த கரோனா பலி: மகாராஷ்டிரம் கடந்து வந்த பாதை
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 60 நாள்களில் 1,135 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 60 நாள்களில் 1,135 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இந்தியாவில் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலம் மகாராஷ்டிரம்தான். கடந்த மார்ச் 17-ஆம் தேதி 64 வயது மிக்க நபர் ஒருவர் மும்பை கஸ்தூர்பா மருத்துவமனையில் பலியானார். மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பலியான முதல் நபர் இவர்தான். அடுத்த 60 நாள்களில் இந்த பலி எண்ணிக்கை இன்று 1,135 ஆக உயர்ந்திருக்கிறது. அந்த மாநிலத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 19 பேர் கரோனா தொற்றால் பலியாகின்றனர்.
மும்பையில் முதல் பலியானதிலிருந்து 60 நாள்களில் 696 பேர் கரோனா தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 11 பேர் இந்தத் தொற்றால் பலியாகின்றனர்.
கரோனா தொற்று பரவலைப் பொறுத்த வரை, மார்ச் 9-ஆம் தேதி வெறும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதுவே இன்றைக்கு 30,706 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 70 நாள்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 438 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
மத்திய சுகாதாரத் துறை தரவுகளின்படி மகாராஷ்டிரத்தின் இன்றைய நிலவரம்:
மொத்தம் பாதித்தோர்: 30,706
மொத்தம் குணமடைந்தோர்: 7,088
மொத்தம் பலியானோர்: 1,135