திருமணத்துக்காக வைத்திருந்த பணத்தை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செலவிட்ட ஆட்டோ ஓட்டுநர்
திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்க செலவழித்து வருகிறார் புணேவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.
புணே: திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்க செலவழித்து வருகிறார் புணேவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.
அதோடு நிற்கவில்லை ஆக்சய் கோத்வாலே (30). தனது ஆட்டோவில் கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகிறார்.
ஊரடங்கால் மே 25ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தனதுதிருமணம் தள்ளிப் போனதால் அக்சய் கவலைப்படவில்லை. தனது திருமண செலவுக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்க செலவிட்டு வருகிறார்.
தனது நண்பர்களுடன் சேர்ந்து தினமும் சுமார் 400 பேருக்கு அக்சய் உணவளித்து வருகிறார். இதுபோன்றதொரு மோசமான சூழ்நிலையில், இல்லாதவர்களுக்கு தன்னால் இயன்றதை உதவ முடிந்ததே என்று நினைத்து அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.