தில்லியில் 10 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: மேலும் 160 பேர் பலி
தில்லியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பாதிப்பு..
தில்லியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நாட்டில் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், தலைநகர் தில்லியில் ஒரே நாளில் 299 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 5,409 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திங்களன்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளின்படி,
கரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 10,054 ஆக உயர்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 9,755 ஆக இருந்தது, இதில் 148 இறப்புகள் உள்ள நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது என்றார்.