ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி: கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் திட்டமிடப்படாத அகழ்வாராய்ச்சி ஈடுபட்டதாக கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் எப்.ஐ.ஆர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் திட்டமிடப்படாத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாக கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் எப்.ஐ.ஆர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செரி ராம்பன் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒன்பது வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நான்கு வழிப் பாதைகள் கொண்ட நெடுஞ்சாலைத் திட்டத்தில் பெரும்பாலான லாரிகள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டன. இதனால், திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக பிரிவு 337 இன் கீழ் (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஈடுபடுதல்) 304ஏ (அலட்சியம் காரணமாக மரணம் ஏற்பட்டுதல்) ஆகிய குற்றத்திற்காக ஞாயிற்றுக்கிழமை ராம்பன் காவல் நிலையத்தில் எப்,ஐ,ஆர் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.