இந்தியா

ஓப்போ தொழிற்சாலையில் 6 ஊழியர்களுக்கு கரோனா; மேலும் 3,000 பேருக்கு பரிசோதனை

DIN

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தொழிற்சாலையில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த மே 8 ஆம் தேதி தான் திறக்கப்பட்டது. 

'எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொழிற்சாலையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. தற்போது 6 ஊழியர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பணியாளர்களின் நலன் கருதி ஆலை பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம். மேலும் 3,000 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது' என்று நிறுவனத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT