முகப்பு
இந்தியா

இறந்துபோன புலம்பெயர் தொழிலாளியின் சடலத்தை சாலையோரம் விட்டுச் சென்ற ஓட்டுநர்

இறந்துபோன புலம்பெயர் தொழிலாளியின் சடலத்தை அவரது மூன்று குழந்தைகளுடன் சாலையோரம் விட்டுச் சென்ற ட்ரக் ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 18 மே, 2020 at 4:59 PM
கோப்புப்படம்
பகிர்:

ஷிவ்புரி: இறந்துபோன புலம்பெயர் தொழிலாளியின் சடலத்தை அவரது மூன்று குழந்தைகளுடன் சாலையோரம் விட்டுச் சென்ற ட்ரக் ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா ஊரடங்கின் காரணமாக நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தொழிலாளிகள் தங்களது சொந்த ஊருக்கு காலநடையாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வரிசையில் மும்பையில் இருந்து புலம்பெயர் தொழிலாளிகள் சிலர் உத்தரபிரதேச மாநிலம் ஆசம்கருக்கு ட்ரக் ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் மத்தியப் பிரதேச மாநிலம் கரேரா பகுதிக்கு வந்தபோது ட்ரக்கில் உள்ள தொழிலாளி ஒருவர் எதிர்பாரதவிதமாக உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். இதனால் அந்த ட்ரக்கின் ஓட்டுநர் குறிப்பிட்ட தொழிலாளியின் சடலத்தை அவரது மூன்று குழந்தைகளுடன் சாலையோரம் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

Advertisement

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரேரா பகுதி தாசில்தார் கவுரி சங்கர் பிர்வா, மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல் தெரிவித்து விட்டு சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும், குழந்தைகளுக்கு தேவையான உதவிகளும் செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.