இந்தியா

பிகார் மற்றும் சண்டீகரில் கரோனா பாதிப்பு நிலவரம் 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று காலை 10 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் விவரத்தை பிகார் மற்றும் சண்டீகர் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

ANI

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று காலை 10 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் விவரத்தை பிகார் மற்றும் சண்டீகர் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

சண்டீகர் 

சண்டீகரில் உள்ள பாபு தாம் காலணியில் வசிக்கும் 2 பேருக்கு கரோனா நேர்மறையாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

அந்த மாநிலத்தில் இதுவரை மொத்தம் 202 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், 108 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பிகார்

பிகாரில் புதன்கிழமை இன்று நிலவரப்படி ஒரேநாளில் 54 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 1,573 ஆக உயர்ந்துள்ளது. 

சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில், 

இன்று ககேரியாவிலிருந்து 15 பேரும், பாகல்பூரில் இருந்து 12 பேரும், பாங்காவிலிருந்து 11 பேரும், மதுபானி மற்றும் நாலந்தாவிலிருந்து தலா 6 பேரும், சுபாலில் இருந்து 2 பேரும், கோபால்கஞ்ச் மற்றும் கதிஹாரில் இருந்து தலா 1 வழக்குகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட புதிய வழக்குகளில் 3 முதல் 55 வயதுக்கு உட்பட்டவை என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

மே.இ.தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்!

இது இந்தியா; வட கொரியா அல்ல! -பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்

சென்செக்ஸ் 27.46 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 0.06% உயர்வு!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்குத் தடை! ஏன்?

SCROLL FOR NEXT