தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.295.55 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ.295.55 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.295.55 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ.295.55 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புது தில்லி: தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ.295.55 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக 15வது நிதிக் குழுவின் கோரிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் ரூ.295.55 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 15வது நிதிக்குழுவின் கோரிக்கையை ஏற்று தமிழக ஊரக உள்ளாட்சித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.816 கோடியும், பிகாருக்கு ரூ.502 கோடியும், மத்தியப்பிரதேசத்தில் ரூ.330 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முத்ரா திட்டத்தின் கீழ் சிறு குறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.