முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுபற்றி தெரிவித்ததாவது:

"கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 11 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்துள்ளனர். மற்றொருவருக்கு தொடர்பில் இருந்ததன் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரளத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது. இதில் 161 பேர் சிகிச்சையில் உள்ளனர்."

முழு கட்டுரையைப் படிக்க →