கர்நாடகத்தில் மேலும் 116 பேருக்கு கரோனா தொற்று
கர்நாடகத்தில் மேலும் 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மேலும் 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,359ஆக உயர்ந்துள்ளது. 3,435பேர் பலியாகி உள்ளனர். 63,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45,300 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இத்துடன் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1568ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு இதுவரை 41 பேர் பலியான நிலையில் 570 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.