இந்தியா

சண்டீகர், உத்தரகண்டில் கரோனா பாதிப்பு நிலவரம்

IANS


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று காலை 10 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் விவரத்தை உத்தரகண்ட் மற்றும் சண்டீகர் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

சண்டீகர்

சண்டீகரில்  பிரிவு 26-ல் உள்ள பாபு தாம் காலணியில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது.

பாபு தாம் பகுதியில் 9 மாடிக் கட்டடத்தில் வசிக்கும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இதுவரை 77 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 216 ஆக உள்ளது. 

உத்தரகண்ட் 

உத்தரகண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி மேலும் 62 பேருக்கு நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தரவுகளின்படி, மே 4 வரை மாநிலத்தில் மொத்தம் 60 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில், மே 10 முதல் மே 20 வரை மேலும் 62 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதில் 50 சதவீதம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT