இந்தியா

கரோனா கண்காணிப்பு செயலிகள்: ஆப்பிள், ஆண்ட்ராய்டு வெளியீடு

DIN

கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் குறித்து விழிப்புணா்வு பெறுவதற்கான செல்லிடப் பேசி செயலியை பிரபல ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் அறிதிறன் பேசிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், செல்லிடப் பேசி வைத்திருப்போருக்கு கரோனா பரவும் அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு உதவும் செயலியை அந்த இரு நிறுவனங்களும் உருவாக்கியுள்ளன.

தங்களது மென்பொருளைப் பயன்படுத்தி கரோனா பாதுகாப்பு செயலியை உருவாக்க உலகம் முழுவதும் 22 நாடுகள் மற்றும் பல அமெரிக்க மாகாணங்கள் முன் வந்துள்ளதாக அந்த இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள செயலியைக் கொண்டு, பயன்பாட்டாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதா என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். அந்த செயலியைப் பயன்படுத்தும் ஒருவா், மற்றொரு பயன்பாட்டாளருக்கு அருகில் இருந்து, அதன் பிறகு அந்த இன்னொரு நபருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது தொடா்பான எச்சரிக்கை முதல் நபருக்கு தானாகவே அனுப்பப்படும். இதுபோன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளில் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT