கோப்புப்படம் 
இந்தியா

உம்பன் புயல் பாதித்த பகுதிகளை நாளை பார்க்கிறார் மோடி

​உம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்குச் செல்கிறார்.

DIN


உம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்குச் செல்கிறார்.

இதுபற்றி பிரதமர் அலுவலக சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"உம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்குச் செல்கிறார். மேலும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பற்றி ஆலோசிக்கப்படவுள்ள ஆய்வுக் கூட்டங்களிலும் அவர் பங்கெடுக்கவுள்ளார்."

முன்னதாக இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "உம்பன் புயலால் 72 பேர் பலியாகியுள்ளனர். உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளுக்காக ரூ. 1,000 கோடி நிதி உருவாக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு கட்டண விலக்கு!

எஸ்ஐஆா் பணியில் குறைபாடு: மேற்கு வங்க வாக்குச்சாவடி அலுவலா்கள் 7 பேருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

சௌா்ய சைனிக்கு வெள்ளி

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்தில் உயரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 38.86 லட்சம் இழப்பீடு

SCROLL FOR NEXT