முகப்பு
இந்தியா

உத்தரகண்ட்: 500-க்கும் மேற்பட்ட நேபாள தொழிலாளர்கள் போராட்டம்

உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவித்து வரும் 500க்கும் மேற்பட்ட நேபாள மக்கள் தங்கள் நாட்டு அரசுக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 21 மே, 2020 at 3:01 PM
பகிர்:


உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவித்து வரும் 500க்கும் மேற்பட்ட நேபாள மக்கள் தங்கள் நாட்டு அரசுக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவாட் பகுதியில் பன்பசா என்ற இடத்தில் ஒன்று திரண்ட 500க்கும் மேற்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களை நாட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் நேபாள அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் நேபாள அரசுக்கு தகவல் அளித்துள்ளது. உடனடியாக அவர்களை நோபாளம் அனுப்பி வைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், அவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க நேபாள அரசு மறுத்து வருகிறது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.