இந்தியா

ஜம்மா மசூதிக்கு அருகே தில்லி காவல்துறை கொடி அணிவகுப்பு

ANI


தில்லியில் உள்ள ஜம்ம மசூதிக்கு அருகே தில்லி காவல்துறையினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மேலும், ரமலான் நோன்பிருக்கும் முஸ்லிம் மக்கள் அனைவரும், நாடு முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அவரவர் இல்லங்களிலேயே தொழுகையை நடத்துமாறும் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி வாயிலாக வலியுறுத்தினர்.

ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று ஏராளமான முஸ்லிம் மக்கள் மசூதிக்கு வந்து தொழுகை நடத்துவது வழக்கம் என்பதால், இன்றைய தினம் முன்னெச்சரிக்கையாக தில்லி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தி, இப்பகுதியை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்தனர்.

மேலும், முஸ்லிம் மக்கள் மசூதிக்கு வருவதைத் தவிர்க்கும் பொருட்டு ஒலிப்பெருக்கி வாயிலாகவும் கோரிக்கையை முன்வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT