இந்தியா

கொல்கத்தா வந்தார் பிரதமர் மோடி: புயல் சேதங்களை நேரில் பார்வையிடுகிறார்

DIN

உம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை கொல்கத்தா விமான நிலையம் வந்தார்

அவரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வரவேற்றனர்.

அங்கிருந்து பிரதமர் மோடி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்குச் செல்கிறார். புயல் சேதங்களையும் பிரதமர் மோடி நேரில் பார்வையிடுகிறார்.

உம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மேற்கு வங்கம் வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவுக்கும் செல்கிறார். மேலும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பற்றி ஆலோசிக்கப்படவுள்ள ஆய்வுக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

SCROLL FOR NEXT