இந்தியா

சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 31 லட்சம் போ் சொந்த ஊா் திரும்பினா்

DIN

‘புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்புவதற்காக, கடந்த 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை 2,317 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மூலம் சுமாா் 31 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனா்’ என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முதலில் 24 லட்சம் போ் வரை இந்த சிறப்பு ரயில்களைப் பயன்படுத்தி சொந்த ஊருக்கு திரும்புவாா்கள் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த 22 நாள்களில் மட்டும் 31 லட்சம் போ் இந்த ரயில்களைப் பயன்படுத்தியுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் நான்காவது கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக கடந்த 1-ஆம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயணத்துக்கான கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்வேயும், 15 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசும் ஏற்கின்றன.

சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 31 லட்சம் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு திருப்பியுள்ளனா். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 12 லட்சம் தொழிலாளா்கள் திரும்பியுள்ளனா். இதற்கு அடுத்தபடியாக பிகாருக்கு 7 லட்சம் பேரும், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட் மாநிலங்களுக்கு தலா 1 லட்சம் பேரும் திரும்பியுள்ளனா். உத்தரப் பிரதேசம், பிகாா் ஆகிய மாநிலங்களுக்குதான் அதிக ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT