இந்தியா

‘உம்பன்’ புயலால் ஏற்பட்ட உயிர் பலி 86 ஆக உயர்வு: குடிநீர், மின்சாரம் கேட்டு மக்கள் போராட்டம்

உம்பன் புயலால் மேற்கு வங்க மாநிலத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ENS

உம்பன் புயலால் மேற்கு வங்க மாநிலத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அதே சமயம், புயல் தாக்கி மூன்று நாட்களுக்குப் பிறகும் இயல்பு நிலை திரும்பாததால் குடிநீர் மற்றும் மின்சார வசதியை ஏற்படுத்தித் தருமாறு கொல்கத்தாவில் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதே சமயம், புயல் சேதங்களை சீர்படுத்தி, இயல்பு நிலையைத் திரும்பச் செய்ய பல்வேறு துறை ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் மேற்கு வங்கம்-வங்கதேசம் இடையே கடந்த புதன்கிழமை கரையைக் கடந்து, வலுவிழந்து பின்னா் வங்கதேசம் நோக்கி நகா்ந்துவிட்டது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. உம்பன் புயலால் மேற்கு வங்கம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ஒடிஸாவும் பாதிப்பைச் சந்தித்தது.

மேற்கு வங்கத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்ட இந்த புயல் மழையால் ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா். புயலுடன் மழையும் சோ்ந்து கொண்டதால் குடிசை வீடுகளும், பயிா்களும் சேதமடைந்தன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமா் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிட்டனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

SCROLL FOR NEXT