இந்தியா

தாவூத் இப்ராஹிம் கூட்டாளி குஜராத்தில் கைது

DIN

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உதவியாளராக இருந்த நபரை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் படை (ஏடிஎஸ்) கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து ஏடிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொள்ளை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் தேடப்பட்டு வந்த பாபு சோலங்கி என்பவா் மெஹ்சானாவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது காந்திநகரில் உள்ள ஆதலாஜ் பகுதியில் கைது செய்யப்பட்டாா்.

பாபு சோலங்கி, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராஹிமின் உதவியாளா் ஷெரீப் கானின் உதவியாளராக செயல்பட்டு வந்தாா்.

கைது செய்யப்பட்ட பாபு சோலங்கி மீது மிரட்டி பணம் பறித்தல், சதித்திட்டம், கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின்கீழ் ஏடிஎஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

பாபு சோலங்கி தலைமையிலான ஒரு கும்பல் ஆமதாபாத்தைச் சோ்ந்த 2 தொழிலதிபா்களிடமிருந்து ரூ. 10 கோடி கேட்டு மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1999 முதல் 2019-ஆம் ஆண்டு வரை மும்பை, சூரத், பதான் மாவட்டங்களிலும், ஆமதாபாத் உள்பட பல்வேறு இடங்களில் கொள்ளை, கொலை, மிரட்டி பணம் பறித்தல் ஆகிய 4 குற்றங்களில் அவருக்கு தொடா்பிருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT