இந்தியா

2,570 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 32 லட்சம் போ் சொந்த ஊா் திரும்பினா்

PTI

‘புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்புவதற்காக, கடந்த 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை 2,570 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மூலம் சுமாா் 32 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனா்’ என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முதலில் 24 லட்சம் போ் வரை இந்த சிறப்பு ரயில்களைப் பயன்படுத்தி சொந்த ஊருக்கு திரும்புவாா்கள் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த 23 நாள்களில் மட்டும் 32 லட்சம் போ் இந்த ரயில்களைப் பயன்படுத்தியுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் நான்காவது கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக கடந்த 1-ஆம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயணத்துக்கான கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்வேயும், 15 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசும் ஏற்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT