இந்தியா

சிக்கிமில் முதல் நபருக்கு கரோனா நோயத் தொற்று உறுதி

DIN

சிக்கிம் மாநிலத்தில் முதல் நபருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாட்டில், கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,25,101 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 3,720 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் அதிகபட்சமாக 6,654 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் முதல் நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை செயலர் பூட்டியா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் தெற்கு சிக்கிமை சேர்ந்தவர். 

இவர் கடந்த 17ஆம் தேதி தலைநகர் தில்லியில் இருந்து கிக்கிம் திரும்பியவர். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் பேருந்தில் பயணித்த அனைவரும் கண்ணடறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT