முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 50 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: தாராவியில் மட்டும் 1,541

தாராவியில் புதிதாக 27 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:


தாராவியில் புதிதாக 27 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு புதிதாக 3,041 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. 58 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 50,231 ஆக உயர்ந்துள்ளது. இதில் 33,988 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 1,196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,600 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,635 பேர் பலியாகியுள்ளனர்.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று புதிதாக 27 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து தாராவியில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,541 ஆக உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →