இந்தியா

வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும்: உ.பி. அரசு

DIN

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு ஒப்புதல் தெரிவித்து கடிதம் வழங்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஏழு நாட்கள் கட்டணத்துடன்  கூடிய தனிமைப்படுத்தலிலும், ஏழு நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கவும் ஒப்புதல் தெரிவித்து கடிதம் ஒன்று வழங்க வேண்டும். 14 நாள்கள் அவர்கள் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும் தொற்று இல்லாத பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இரு மாதங்களுக்குப் பின்னர் ஆந்திரம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களைத் தவிர நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT