இந்தியா

மகாராஷ்டிரத்தில் இதுவரை 1,809 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிரத்தில் மேலும் 51 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

ANI

மகாராஷ்டிரத்தில் மேலும் 51 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 51 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,809 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 678 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, மகாராஷ்டிரத்தில் இதுவரை 50,231 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 678 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் தொற்றுக்கு 1,635 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெளிவு சுழிவு... அனன்யா!

எமது நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவுக்கு நல்ல காலம்! - டிரம்ப்

அமெரிக்க விசா நடைமுறையில் மாற்றம்! இந்தியர்களுக்கு பாதிப்பா?

வன்முறையால் நேபாள உள் துறை அமைச்சர் ராஜிநாமா!

ஓமனை வீழ்த்தியது இந்தியா: வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!

SCROLL FOR NEXT