தில்லியில் ஒரே நாளில் 635 பேருக்கு கரோனா: 14 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு
தில்லியில் ஒரே நாளில் புதிதாக 635 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அங்குப் பாதித்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று சுகாதாரத் துறை திங்கள்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
தில்லியில் ஒரே நாளில் புதிதாக 635 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அங்குப் பாதித்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று சுகாதாரத் துறை திங்கள்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
தில்லி சுகாதாரத் துறை அளித்த தினசரி தகவலின்படி,
கரோனா நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களில் 7,006 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். மேலும், 6,771 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தலைநகர் தில்லியில் கரோனா பாதித்து இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கின் நான்காம் கட்ட தளர்வுகளுக்குப் பிறகு கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.