முகப்பு
இந்தியா

சீனப் படைகள் குவிப்பு; லடாக் எல்லையில் படைப்பலத்தை அதிகரித்தது இந்தியா

லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பல்வேறு இடங்களில் சுமார் ஐந்து ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்துள்ள நிலையில், இந்திய ராணுவமும் அதற்கேற்ப படைப்பலத்தை அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:


புது தில்லி: லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பல்வேறு இடங்களில் சுமார் ஐந்து ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்துள்ள நிலையில், இந்திய ராணுவமும் அதற்கேற்ப படைப்பலத்தை அதிகரித்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அப்பால் சீனப் படை வீரர்கள் மிகப்பெரிய அளவில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சீன ராணுவம், வீரர்களுடன், ராணுவ தளவாடங்களையும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலை நிறுத்தியிருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

கல்வான் நலா பகுதியில் இந்தியா ராணுவ நிலைக்கு அருகே சீன ராணுவ வீரர்கள் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியுருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் சீனா சார்பில் சாலைகள் அமைப்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கு இந்தியா தரப்பில் கடும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டும், அந்த நடவடிக்கைகளை சீனா நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →