முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 80 காவலர்களுக்கு கரோனா: மொத்த பாதிப்பு 1,889

மகாராஷ்டிரத்தில் மேலும் 80 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

Updated On : 26 மே, 2020 at 12:36 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் மேலும் 80 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 80 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,889 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழப்புகள் 20 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

இதுவரை 838 காவலர்கள் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 1,031 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, மகாராஷ்டிரத்தில் இதுவரை 52,667 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் தொற்றுக்கு 1,695 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.