முகப்பு
இந்தியா

ஒடிசா: கொலையை மறைக்க கரோனா மீது பழிபோட்ட கோயில் பூசாரி

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள கோயிலின் பூசாரி, கரோனாவைத் தடுக்க 52 வயது நபரைக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 28 மே, 2020 at 5:43 PM
பகிர்:


புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள கோயிலின் பூசாரி, கரோனாவைத் தடுக்க 52 வயது நபரைக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன்சாரி ஓஜா (70) என்ற பூசாரி, காவல்நிலையத்தில் தாமாக வந்து சரண் அடைந்துள்ளார். மேலும், கோயிலுக்குள் தான் கொலை செய்ததையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

கரோனா பேரிடம் முடிவுக்கு வர வேண்டும் என்றால், கோயிலுக்குள் உயிர் பலி கொடுக்குமாறு தெய்வம் தனது கனவில் வந்து சொன்னதாகவும் அவர் காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.

Advertisement

புதன்கிழமை நள்ளிரவில், பந்தஹுடா கிராமத்தில் உள்ள கோயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலையுண்ட நபர் 52 வயது சரோஜ் குமார் பிரதான் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆனால், முதற்கட்ட விசாரணையில், பூசாரி ஓஜாவுக்கும், சரோஜ் குமாருக்கும் முன்பகை இருந்திருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து, 70 வயது நபர் 52 வயது நபரை கொல்வது சாத்தியமில்லை என்பதாலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.