முகப்பு
இந்தியா

மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல் முயற்சி முறியடிப்பு; வெடித்துச் சிதறிய கார்

புல்வாமா தாக்குதல் போன்று ஒரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த முயற்சி பாதுகாப்புத் துறையின் சமயோஜித நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:


புல்வாமா தாக்குதல் போன்று ஒரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த முயற்சி பாதுகாப்புத் துறையின் சமயோஜித நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகளை நிரப்பிய கார் மூலம் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த மிகப் பயங்கர தாக்குதல் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை பயங்கரவாதிகள் ஓட்டி வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து ஜம்மு காஷ்மீரின் புல்வாமா அருகே சோதனைச் சாவடி அமைத்து காவல்துறை, ராணுவ வீரர்கள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது அங்கே வந்த ஒரு கார் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பு வீரர்கள் காரை நிறுத்திய போது, அதன் ஓட்டுநர் அதனை நிறுத்திவிட்டு தப்பியோடினார்.

உடனடியாக அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள், சமயோஜிதமாக யோசித்து, காருக்குள் வெடிபொருட்கள்  இருப்பதைக் கண்டறிந்தனர். அதனை அப்புறப்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கருதி, காருக்குள் வைத்தே பாதுகாப்பாக வெடிபொருட்களை வெடிக்கச் செய்தனர்.

இதனால், பயங்கரவாதிகள் நடத்த இருந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.