இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 105 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் புதன்கிழமை ஒரே நாளில் கரோனா பாதித்து 105 பேர் பலியாகியுள்ளனர். இதில் 32 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். இதனால், அந்த மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,897 ஆக உயர்ந்துள்ளது.

DIN


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் புதன்கிழமை ஒரே நாளில் கரோனா பாதித்து 105 பேர் பலியாகியுள்ளனர். இதில் 32 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். இதனால், அந்த மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,897 ஆக உயர்ந்துள்ளது.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிரத்தில் 2,190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 56,948 ஆக உயர்ந்துள்ளது.

முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று இலக்க எண்ணில் பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் மட்டும் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 1,097 பேர் பலியாகியுள்ளனர்.

ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், தற்போது மகாராஷ்டிரத்தில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதே போல பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலமும் 11.5 நாள்களில் இருந்து 14.7 நாள்களாக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT