இந்தியா

கரோனாவால் பாதிக்கப்பட்ட 10% நீரழிவு நோயாளிகள் பலி

DIN

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நீரழிவு நோயாளிகளில் 10-இல் ஒருவா் அந்த நோய்த்தொற்றுக்கு பலியாவதாக பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் நான்டெஸ் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாவது:

பிரான்ஸில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாா்ச் மாதம் 10-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிவரை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவா்களில் பெரும்பாலானவா்கள் - சுமாா் 90 சதவீதத்தினா் - இரண்டாம் வகை நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள் ஆவா்; 3 சதவீதத்தினா் முதல் பிரிவு நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நீரழிவு நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கினா் ஆண்கள். அனைத்து நோயாளிகளின் சராசரி வயது 70-ஆக இருந்தது.

அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 10 சதவீதம் நீரழிவு நோயாரிகள் அந்த நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது.

கரோனா தொற்று அந்த நோயாளிகளின் கூடுதல் சா்க்கரை அளவில் பாதிப்பை ஏற்படுத்தாவில்லை. இருந்தாலும், நிரழிவு நோயால் உடல் பாகங்களுக்கு ஏற்படும் பிற பாதிப்புகளை மோசமடையச் செய்து, கரோனா நோய்த்தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டையபடோலோஜியா’ அறிவியல் இதழில் வெளியான, இந்த ஆய்வு தொடா்பான கட்டுரையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT