இந்தியா

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்: முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

DIN

மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய நிலையில், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில், மே 31 வரை அவற்றை மூட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

எனவே, வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கக்கோரி பல்வேறு இடங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. பொது முடக்கம், நாடு முழுவதும் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஜூன் 1-ம்தேதி முதல் திறக்கப்படும். இருப்பினும், 10 பேருக்கு மேல் வழிபாட்டுத் தலங்களுக்குள் இருக்க அனுமதியில்லை. கூட்டங்கள் நடத்தப்படுவதற்கும் அனுமதி கிடையாது இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT