முகப்பு
இந்தியா

ஆயிரத்தைத் தாண்டியது அசாமில் கரோனா பாதிப்பு

அசாம் மாநிலத்தில் புதிதாக 177 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 30 மே, 2020 at 11:24 AM
பகிர்:

அசாம் மாநிலத்தில் புதிதாக 177 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சனிக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 177 பேர் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,057 ஆக உயர்ந்துள்ளது. இதில் 925 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கரோனாவுக்கு 1,65,799 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 89,987 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 71,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நோயால் 4,706 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.