உ.பி., பிகாருக்கு மட்டும் 80 சதவீத சிறப்பு ரயில்கள்: ரயில்வே வாரியம்
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 80 சதவீத ரயில்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாருக்கு இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 80 சதவீத ரயில்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாருக்கு இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்ததாவது:
"புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் மே 1-ஆம் தேதி முதல் இயக்கப்படத் தொடங்கின. இதுவரை 4,050 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் 54 லட்சத்துக்கும் மேலான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். சுமார் 80 சதவீத ரயில்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாருக்கு இயக்கப்பட்டுள்ளன."