முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 5,369 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,369 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 நவம்பர், 2020 at 7:56 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:16 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,369 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 5,369 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,38,775 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 3,726 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 113 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 44,024 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இதுவரை மொத்தம் 15,14,079 பேர் குணமடைந்துள்ளனர். 1,25,109 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.