முகப்பு
இந்தியா

நிதிஷ் குமாரால் பிகாரைக் கையாள முடியவில்லை: தேஜஸ்வி

​பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சோர்வடைந்துவிட்டார், அவரால் மாநிலத்தைக் கையாள முடியவில்லை என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
கோப்புப்படம்
பகிர்:


பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சோர்வடைந்துவிட்டார், அவரால் மாநிலத்தைக் கையாள முடியவில்லை என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

"நிதிஷ் குமாரால் பிகாரைக் கையாள முடியவில்லை. ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 77 காவலர்கள் மட்டுமே உள்ளனர். காலிப் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. 15 வருடங்களால் முதல்வரால் சாதிக்க முடியாததை எங்களால் சாதிக்க முடியும். எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் விடைபெறுவது உறுதியாகிவிட்டது.

போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாதது மருத்துவமனைகளின் நிலைமையை மோசமாக்கியுள்ளது. நிதிஷ் குமாரின் அரசில் கல்வித் துறையும் சீர்குலைந்துள்ளது. இந்தியாவில் ஏழை மாநிலமாக பிகார் கருதப்படுவது ஏன் என்று அவரிடம் கேள்வியெழுப்ப விரும்புகிறோம்.

இந்த தேர்தல் நிதிஷ் குமாரின் வீழ்ச்சி, மகா கூட்டணியின் எழுச்சி என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்."

பிகாரில் 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 172 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக முறையே நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →