கபூர்தாலாவில் ரயில் பெட்டிகள் உற்பத்தி 2 மடங்காக அதிகரிப்பு : பியூஷ் கோயல்
கபூர்தாலாவில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்தாண்டைவிட உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கபூர்தாலாவில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்தாண்டைவிட உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரையில்,
"மேக் இன் இந்தியா திட்டம் கரோனாவிற்கு முந்தைய சாதனைகளை உடைத்துள்ளது. கபுர்தலாவில் உள்ள ராயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அதன் உற்பத்தியை இரட்டிபாக்கி அக்டோபர் மாதம் புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒரு நாளைக்கு 3.08 பெட்டிகள் தயாரித்தன, ஆனால் தற்போது 5.88 பெட்டிகள் உற்பாத்தி செய்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.