முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் குணமடைந்தோர் விகிதம் 92 சதவீதமாக உயர்வு

தெலங்கானாவில் கரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 92 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 2 நவம்பர், 2020 at 11:20 AM
Telangana's Covid recovery rate improves to 92%
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:16 PM

தெலங்கானாவில் கரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 92 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவில் இன்றைய பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இன்று தெலங்கானாவில் ஒரேநாளில் 1,456 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த விகிதம் 91.6 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 25,643 பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், 922 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 2,40,970 ஆக உள்ளது. 

தொற்று பாதித்து ஏழு பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,348 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானாவின் கரோனா இறப்பு விகிதம், இந்தியாவின் 1.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 0.55 சதவீதமாக உள்ளது. 

கரோனா பாதித்து 17,630 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 14,717 பேர் வீட்டு தனிமையிலும், பல்வேறு நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தெலங்கானாவில் மொத்தம் 43,49,309 லட்சத்திற்கும் அதிகமான கரோனா சோதனைகளை மேற்கொண்டுள்ளன என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.