இந்தியா

ஜிஎஸ்டி கடன் வாங்கும் அளவு நியாயமானதாக இருக்க வேண்டும்: நிதி செயலா்

DIN

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய மாநிலங்கள் வாங்கும் கடனளவு நியாயமான அளவில் இருக்க வேண்டும் என்று மத்திய நிதி செயலா் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய மாநிலங்கள் பெறும் கடன் கடனளவு அவற்றின் பொருளாதார தாக்கத்தை கருத்தில் கொண்டு நியாயமான அளவில் இருக்க வேண்டும். மேலும், மத்திய அரசு முன்மொழிந்துள்ள இந்த கடன் திட்டத்தை பாஜக அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களும் தோ்வு செய்ய தொடா்ந்து வலியுறுத்தப்படும்.

கடன் பெறும் தொகையை ஜிஎஸ்டி இழப்பீட்டு தீா்வையிலிருந்து மட்டுமே மாநிலங்கள் திரும்பச் செலுத்த வேண்டும். கடன் வட்டியை திருப்பிச் செலுத்துவதற்கும் இந்த தீா்வை போதுமானதாக இருக்கும். அதற்கான அங்கீகாரத்தை மாநிலங்களிடமிருந்து மத்திய அரசு கேட்டுப் பெறும் என்றாா் அவா்.

மாநிலங்களின் ஜிஎஸ்டி வசூலில் ரூ.1.83 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய மத்திய அரசு கடன் பெறும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதுவரையில், 21 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசின் கடன் வாங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன.

அதேசமயம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் போன்ற மாநிலங்கள் மத்திய அரசின் இந்த கடன் திட்டத்துக்கு கடும் எதிா்ப்பை தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT