10 மாநில இடைத்தேர்தல்கள்: நாகாலாந்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு
நாடு முழுவதும் பல மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைகளுக்கான இடைத்தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைகளுக்கான இடைத்தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், நாகாலாந்து, ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய 10 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி தேர்தல் இடைத்தேர்தல் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் நடைபெற்ற தேர்தலின் முடிவில், அதிகபட்சமாக நாகாலாந்தில் 83.69 சதவீதம் வாக்குப்பதிவானது.
அடுத்ததாக தெலங்கானா 81.44 சதவீதம், சத்தீஸ்கர் 71.99 சதவீதம், ஒடிசா 68.08 சதவீதம், ஹரியாணா 68 சதவீதம், மத்திய பிரதேசம் 66.37 சதவீதம், ஜார்கண்ட் 62.51 சதவீதம், குஜராத் 57.98 சதவீதம், உத்தரபிரதேசம் 51.57 சதவீதம் மற்றும் கர்நாடம் 51.3 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பிகாரில் நடைபெற்ற சட்டப்பேரவையின் 2ம் கட்டத் தேர்தலில் 53.51 சதவீதம் வாக்குப்பதிவானது.
மணிப்பூரில் காலியாக உள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், பிகாரில் காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும்.