முகப்பு
இந்தியா

பிகாரில் பிரசாரத்தின்போது நிதீஷ்குமார் மீது வெங்காயம் வீச்சு

பிகார் சட்டப்பேரவையின் 3-ம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது நிதீஷ் குமார் மீது செவ்வாய்க்கிழமை வெங்காயம் வீசப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
நிதீஷ்குமார்
பகிர்:

பிகார் சட்டப்பேரவையின் 3-ம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது நிதீஷ் குமார் மீது செவ்வாய்க்கிழமை வெங்காயம் வீசப்பட்டது.

பிகாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகின்றது. இன்று 2-ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் நிலையில் நவம்பர் 7ஆம் தேதி நடக்கவுள்ள 3-ம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுபானியின் ஹர்லாகி தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்காக நிதீஷ் குமார் வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் நிதீஷ் குமார் மீது வெங்காயம் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →