மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,505 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,505 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,505 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. அங்கு புதிதாக 5,505 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,98,198 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8,728 பேர் குணமடைந்துள்ளனர், 125 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 44,458 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 15,40,005 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு குணமடைவோர் விகிதம் 90.68 சதவிகிதமாக உள்ளது.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,12,912 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.