முகப்பு
இந்தியா

ம.பி.யில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்

மத்திய பிரதேசத்தில் புதன்கிழமை 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
கோப்புப்படம்
பகிர்:

மத்திய பிரதேசத்தில் புதன்கிழமை 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மத்திய பிரதேசம் நிவாடி மாவட்டத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் சேதுபுரா கிராமத்தில் புதன்கிழமை காலை இச்சம்பவம் நடந்துள்ளது. 

ஹரிகிஷன் குஷ்வாஹாவின் மகன் பிரஹ்லாத் (வயது 3) ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் 100 அடிக்கு தண்ணீர் உள்ளதால் சிறுவன் எவ்வளவு அடி ஆழத்தில் சிக்கியுள்ளான் என்று தெரியவில்லை.

அண்மையில் தோண்டப்பட்ட அந்த கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளதாக காவல்துறை அதிகாரி  நரேந்திர திரிபாதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.